இமாச்சல பிரதேசம் | குலுங்கிய குல்லு மாவட்டம்! 3.0 ரிக்டர் பதிவு.! 
                                    
                                    
                                   Himachal Pradesh Kullu district Earthquake
 
                                 
                               
                                
                                      
                                            இமாச்சலப் பிரதேசம் குல்லு மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 
அதிகாலை 3.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 
குல்லு மாவட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும் பொருள் சேதம் குறித்தும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 
                                     
                                 
                   
                       English Summary
                       Himachal Pradesh Kullu district Earthquake