இங்கிலாந்தில் வெளியான ஹாரிபாட்டர் உருவம் பொறித்த நாணயம்..! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஹாரிபாட்டர் தொடர் வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில், ராயல் மிண்ட் நிறுவனம் ஹாரிபாட்டர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து நாட்டில் நாணயங்களைத் தயாரிப்பதற்கும், அச்சிடுவதற்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக ராயல் மின்ட்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதன் முதலாக 1997ஆம் ஆண்டில் ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசபர்ஸ் ஸ்டோன்' என்ற தொடர் வெளியானது. 

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து நாணயங்களையும் தயாரிக்கும் ராயல் மிண்ட் நிறுவனம், ஹாரி பாட்டர் உருவம் பொறித்த 50 பென்ஸ் நாணயங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நாணயம் குறித்து, ராயல் மிண்ட் நிறுவனம் தெரிவித்ததாவது,

ராயல் மிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய நாணயங்களில் ஹாரிபாட்டரின் முகம் மட்டுமல்லாமல், ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் புதிய மன்னர் சார்லஸ்-III ஆகியோரின் உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஹாரிபாட்டர் தொடரில் இடம்பிடித்து மக்களை வெகுவாக கவர்ந்த டம்பில்டோர் மற்றும் ஹாக்வார்ட்ஸ் பள்ளி மற்றும் ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

நாணயங்களில் உள்ள வடிவமைப்பை, மிகவும் துல்லியமாக வைத்திருக்க ராயல் மிண்ட் நிறுவனம் சிறப்பு லேசர்களைப் பயன்படுத்தி நாணயங்களில் வடிவமைப்புகளை உருவாக்கினர். இதே போன்று சில சிறப்பு நாணயங்களும் வெளியிடப்பட உள்ளன. இந்த நாணயங்கள் ஒரு பிரகாசமான ஒளியின் கீழ் வைக்கப்படும் போது '25' என்ற எண் பொறிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும். 

இந்த ஆண்டு முதல் இரண்டு 50பி நாணயங்கள் வெளியிடப்பட உள்ளன. அதன் இறுதியாக, இரண்டு நாணயங்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும். இந்த நாணயங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று ராயல் மிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harry pottar coins publish ingland royal mint


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->