பள்ளிக்கு செல்லும் சிறுமிகளுக்கு பாய்சன் கொடுக்கும் மர்ம நபர்கள் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஈரான் நாட்டில் புனித நகரமான கோம் நகரில் சில மர்ம நபர்கள் பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதை நிறுத்துவதற்காக பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளுக்கு விஷம் கொடுப்பதாக ஈரான் அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள கோம் நகரில் கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்குச் சுவாச பகுதியில் பாய்சன்  பாதிப்பு ஏற்படும் வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது. 

இந்த செயலை நாட்டின் துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அந்த நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அமைச்சர் யூனஸ் பனாஹி தெரிவித்ததாவது, "கோம் நகரில் உள்ள பள்ளிகளில் பல மாணவிகளுக்கு இந்த பாய்சன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரணை செய்ததில், குறிப்பிட்ட சிலர் அனைத்துப் பள்ளிகளும், அதிலும் குறிப்பாகப் பெண்கள் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்ததாவது, "இருபது நாட்கள் ஆகியும் என் கால்களில் சில பலவீனத்தை உணர்கிறேன். என் கால்களை நகர்த்துவதில் எனக்கு சிக்கல்கள் உள்ளது. எனது நண்பர்கள் இருவர் இன்னும் மருத்துவமனையிலேயே உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைதும் செய்யப்படவில்லை. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை தொடங்கவுள்ளது" என்றது தெரிவித்துள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls poisoned in iran from going to school


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal