கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட கலவரம்.. 127 பேர் உயிரிழப்பு.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 127 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவில் ஈஸ்ட் ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் இந்தோனேசியாவின் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் பரம எதிரிகளான பெர்சிபயா சுரபயா அணியும், அரேமா மலாங் அணியும் மோதின.

இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டிகள் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெர்சிபயா சுரபயா அணி  3-2 என்ற கோல்கணக்கில் அரேமா மலாங் அணியை தோற்கடித்தது.

இதனால் ஆத்திரமடைந்த அரேமா மலாங் அணி ரசிகர்கள் பெர்சிபயா சுரபயா அணி ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கலவரமாக மாறியது.

இதனையடுத்து இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வீசினர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி 34 பேர் சம்பவ மைதானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த கலவரத்தில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த கலவரத்தால் இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Football match violence in Indonesia 127 peoples death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->