ஸ்வீடனுடன் நேட்டோ அமைப்பில் இணையும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் - பின்லாந்து - Seithipunal
Seithipunal


நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதல் உக்ரைனின் பல பகுதிகளை சின்னாபின்னமாக்கியுள்ளது. இருப்பினும் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத வகையிலும், பொருளாதார வகையிலும் தொடர்ந்து உதவி வருவதால் ரஷ்ய தாக்குதலை சமாளித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் ரஷ்யாவிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளன. ஆனால் தங்கள் நாட்டின் குர்து இன மக்கள் ஸ்வீடன் நாட்டிற்கு ஆதரவளிப்பதால் அந்நாட்டை நேட்டோ அமைப்பில் இணைய அனுமதிக்க மாட்டோம் என துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ கூறும் பொழுது, நேட்டோவில் இணைவதற்கான ஸ்வீடனின் விண்ணப்பம் நீண்ட காலத்திற்கு கிடப்பில் போடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டால், இரு நாடுகளும் ஒன்றாக நேட்டோவில் இணையும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Finland says The decision to join NATO with Sweden will be reconsidered


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->