ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உக்ரைன் பயணம் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு உதவியாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பொருளாதார வகையிலும், ஆயுத வகையிலும் உதவி வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், உக்ரைனுக்கும் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உக்ரைன் தலைநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

போர் தொடங்கியதிலிருந்து மூன்றாவது முறையாக உக்ரைனுக்கு வந்துள்ளதாகவும், போரில் உக்ரைன் படைகள் முன்னேறி வரும் நிலையில், ஐரோப்பிய பொருளாதாரத்தையும், உக்ரைன் மக்களையும் நெருக்கமாக்குவது குறித்து உக்ரைன் அதிபரிடம் விவாதிக்க உள்ளதாகவும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ள உயர்மட்ட ஐநா கூட்டத்தில் உக்ரைன் அதிபர் பங்கேற்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவரின் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

European union head visit to Ukraine


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->