"டிக் டாக்" மிகவும் ஆபத்தான செயலி.! எலான் மஸ்க் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் வீடியோ செயலி பல்வேறு நாடுகளில் இளம் வயதினரிடையே பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது. இதனிடையே இந்தியா, ஆப்கானிஸ்தான், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் சைபர் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டிக் டாக் செயலியை தடை செய்தன.

இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் கோடீஸ்வரரான எலான் மஸ்க், பொழுதுபோக்கு செயலியான டிக் டாக் இளம் வயதினருக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டதாகவும், அதில் கற்பனையாக 13 வயது சிறுவன் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டதில் உணவுக் கோளாறுகள், உடல் உருவம், சுய-தீங்கு மற்றும் தற்கொலை தூண்டுதல் உள்ளிட்ட வீடியோ பதிவுகள் சிறுவனின் பெயரில் பதிவேற்றப்பட்டதாகவும், அவை எதிர்மறையான எண்ணங்களை சிறுவனுக்கு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டிக் டாக் மிகவும் ஆபத்தான செயலி என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon musk accused that tik tok is dangerous app


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->