புறப்பட்ட விமானம் திடீரென நிறுத்தம் - பயத்தில் முண்டியடித்து வெளியேறியதால் 11 பயணிகள் காயம்.! - Seithipunal
Seithipunal


புறப்பட்ட விமானம் திடீரென நிறுத்தம் - பயத்தில் முண்டியடித்து வெளியேறியதால் 11 பயணிகள் காயம்.!

ஹாங் காங் நாட்டைச் சேர்ந்த கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஹாங் காங்கில் இருந்து அமெரிக்கா நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட இருந்தது. இதில் 293 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட பதினேழு பணியாளர்கள் இருந்தனர். 

இதையடுத்து இந்த விமானம் புறப்படத் தயாராகும் போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த விமானி உடனே விமானத்தை நிறுத்தினார். சில நிமிடத்தில் புறப்பட்ட இருந்த விமானம் திடீர் என்று  நிறுத்தப்பட்டதால், பயணிகள் பதறியடித்த அவசர அவசரமாக விமானத்தின் எமர்ஜென்சி கதவுகள் மூலம் வெளியேறினர். 

ஒருவருக்கொருவர் உயிர் பிழைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் முண்டியடித்துக் கொண்டு விமானத்தில் இருந்து வெளியேறியதில் பதினொரு பயணிகள் காயம் அடைந்தனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை பெற்றபின் ஒன்பது பேர் திரும்பி வந்தனர். 

மேலும், இருவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை விமான நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக விமானத்தின் ஒரு டயர் வெடித்தது தான் இந்தச் சம்பவத்திற்கு காரணம் என்று தகவல் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eleven passangers injured for hong kong flight tyre burst


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->