பல்கேரியாவில் கண்டெய்னர் லாரியில் இருந்து 18 அகதிகள் பிணமாக மீட்பு.!  - Seithipunal
Seithipunal


பல்வேறு காரணங்களால் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், துருக்கி, ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் சட்டவிரோதமாக அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக, துருக்கி நாட்டில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அகதிகளாக ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து வருகின்றனர். இதனை அந்தந்த நாட்டில் உள்ள பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று துருக்கியில் இருந்து பல்கேரியா பகுதிக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரி ஒன்று தலைநகர் சோபியாவில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த லாரியை சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியின் உள்ளே, 18 பேர் பிணமாக கிடந்தனர். மேலும், 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில், கண்டெய்னர் லாரியில் இருந்தவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் என்பதும், அனைவரும் துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eighteen migrants peoples body rescue container lorry in balgeriya


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->