ஈக்வடார் நாட்டின் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரம்..43 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஈக்வடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 43 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

தென்னமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது.

ஈக்வடார் தலைநகர் குய்டோவில் இருந்தே 80 கிலோ மீட்டர் தொலைவில் சாண்டோ டொமிங்கோ டிலாஸ் கொலராடோசில் உள்ள பெல்லாவிஸ்டா சிறைச்சாலையில் கைதிகளின் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அவர்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பயங்கர கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தில் நாற்பத்தி 43 உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். கலவரத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இந்த கலவரத்தைப் பயன்படுத்தி 200க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதன்பின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கலவரத்தை போலீஸார் அடக்கியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தலைவர் தெரிவித்ததாவது, இந்த கலவரத்தில் காயமடைந்த கைதிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ecuadorian prison riot kills at least 43


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->