தைவானில் மீண்டும் நிலநடுக்கம்.. இரவில் பதறி ஓடிய பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


தைவானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டின் ஹூஹலின் நகரத்திலிருந்து வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான வலுவான நிலா நடுக்கத்தால் இரண்டு கட்டிடங்களின் ஒரு பகுதி இடிந்து விழுந்து உள்ளது. இதனால் பதறிப்போன பொதுமக்கள் கட்டிடங்களிலிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

இந்த நிலநடுக்கத்தில் ஹூஹலின் நகரில் உள்ள இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை உயிர் சேதங்கள் குறித்தோ, பொருள் சேதமோ குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. 

மூன்று வாரங்களுக்கு முன்பு தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நெடுநடுக்கத்தால் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Taiwan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->