நான் அதிபரானால், ஒரே நாளில் உக்ரைன் போரை நிறுத்துவேன் - டிரம்ப் உறுதி.!  - Seithipunal
Seithipunal


நான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றால் ஒரே நாளில், உக்ரைன் போரை நிறுத்தி விடுவேன் என்று டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதில் உக்ரைன் நாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டது. பெண்கள், மூதாட்டிகள், சிறுமிகள் பலரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியது. 

அத்துடன் கொத்துக்கொத்தாக பல உயிர்கள் இரு தரப்பிலும் போனது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மூன்றாவது உலகப்போருக்கு இது வழி வகையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. 

இத்தகைய நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் மேரிலெண்டில் பேசிய போது, "நான் மட்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று இருந்திருந்தால் ஒரே நாளில் இந்த உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்தி இருப்பேன். ரஷ்ய அதிபர் புடின் எனது நெருங்கிய நண்பர்.

நான் அவரிடம் பேசி இந்த போரை நிறுத்தி இருப்பேன். நான் சொன்னால் அவர் எனது பேச்சுக்கு செவி சாய்ப்பார். என்னால் மட்டும்தான் மூன்றாம் உலகப்போர் ஏற்படாமல் தடுக்க முடியும்." என்று ஆவேசமாக பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donald trump about Ukraine war 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->