அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மீண்டும் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கிய நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்தது. அதன் பின் கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்ட பின் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக பொது இடங்களில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் கொரோன தொற்று வருவதால் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. இது குறித்து சீரும் நிறுவனத்தின் தலைமை செயல அதிகாரி கூறியதாவது, தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கோவோவேக்ஸ் போஸ்டர் தடுப்பூசி சுமார் 6 மில்லியன் இருப்பில் உள்ளது. எனவே இளைஞர்கள் போஸ்டர் போஸ்ட் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன் வர வேண்டும். மேலும் அடுத்த 90 நாட்களுக்குள் 6 முதல் 7 மில்லியன் கோவிஷீல்டு தடுப்பூசியை இருப்பில் வைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid spred vaccine production starts


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->