சீன பொருட்களை புறக்கணித்தால்... எச்சரிக்கை விடுத்துள்ள சீனா.!! - Seithipunal
Seithipunal


இந்திய லடாக் எல்லையில், இந்திய - சீன இராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், சீன தரப்பில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த அதிகாரபூர்வ தகவல் இல்லை. 

இந்திய இராணுவத்தினரின் வீரமரணத்தை தொடர்ந்து இந்தியர்கள் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து அதிகளவு எழுந்து வந்தது. இதனால் இருநாட்டு உறவுகள் பாதிக்கும் என்று அந்நாட்டின் அரசு பத்திரிகை குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. 

மேலும், சீன தயாரிப்புகள், அலைபேசிகள் போன்றவற்றை இந்தியா புறக்கணித்தால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் என்று தலைப்புடன் கூடிய தலையங்கத்தை வெளியிட்டுள்ளது. சீன பொருட்கள் புறக்கணிக்கப்பட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும், வாடிக்கையாளர்களின் நலன் சார்ந்த காரணத்தால் இப்பிரச்சனை சரியாகும் என்றும் கூறியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China warn to india about Boycott china products in India


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->