தைவானுக்கு போர் விமானங்களை அனுப்பிய சீனா.! - Seithipunal
Seithipunal


கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 43 சீன விமானப்படை விமானங்கள் தைவான் ஜலசந்தி பகுதியின் எல்லையை கடந்துள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உரிமை கோரும் தீவுக்கு அருகில் சீனா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

தைவானைத் தனது சொந்தப் பகுதி என்றுக் கூறும் சீனா, கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் "போர்ப்பயிற்சி" மேற்கொண்டதாக தெரிவித்தது. 

இந்த பயிற்சிகள் சீனாவின் கோரிக்கைகளை மிகக் கடுமையாக நிராகரிக்கும் தைவானின் பிராந்திய அமைதியை அழித்து தைவானின் மக்களை சிக்கவைப்பதற்கு முயற்சிப்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய வரைபடத்தின்படி, "சமீபத்தில் ஊடுருவலில் ஈடுபட்டுள்ள ஜெட் விமானங்கள், அதிகாரப்பூர்வமற்ற தைவான் ஜலசந்தியின் சராசரிக் எல்லை கோட்டைக் கடந்தன. 

அதேபோன்று தைவான் அருகே ஏழு சீன கடற்படைக் கப்பல்களும் நிறுத்தபட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சீன விமானங்களை எச்சரிப்பதற்கு தைவான் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக தைவான் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china war planes send to taiwan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->