தண்ணீருக்காக ஏற்பட்ட கலவரத்தில் 44 பேர் கொலை.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


வடக்கு ஆப்பிரிக்க நாடான கேமரூனில் தண்ணீர் எடுக்க இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 44 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக மக்கள் தண்ணீருக்காக பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அந்த வகையில் கேமரூன் நாட்டின் எல்லை கிராமம் ஒன்றில் நீர்நிலையை பகிர்ந்துகொள்வதில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் கலவரமாக மாறியது பின்னர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை அந்தப் பகுதியில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cameron water problem 44 Members death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->