உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க பிரிட்டனும் மறுப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய தாக்குதலை சமாளிக்க மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் போர் விமானங்களை வழங்குமாறு உக்ரைன் கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்களது விமானங்களை அனுப்ப முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், தற்போது பிரிட்டனும் உக்ரைனுக்கு விமானங்கள் வழங்க மறுத்துள்ளது.

இது தொடர்பாக பிரதமா் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் கூறும் பொழுது, ரஷ்யா தாக்குதலிருந்து உக்ரைனை பாதுகாத்துக் கொள்ளவும், ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து ரஷ்ய படையினரை வெளியேற செய்வதற்கு மட்டுமே பிரிட்டன் முக்கியத்துவம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்பப்படாது என்றும், பிரிட்டன் போர் விமானங்களை இயக்க வேண்டுமென்றால் அதற்கு பல மாதங்கள் தேவைப்படும் என்று குறிப்பிட்டார். இப்போதைய சூழ்நிலையில் உக்ரைன் வீரர்களுக்கு துரிதமாக பயிற்சி அளித்தாலும் பிரிட்டன் போர் விமானங்களை அவர்கள் பயன்படுத்த 36 மாதங்கள் ஆகும் எனவும், பிரிட்டனின் விமான பயிற்சிக்கான குறைந்த கால அளவு 5 ஆண்டுகள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Britain also refuses to provide fighter jets to Ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->