இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள்.. அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வாரத்தில் நான்கு நாட்கள் வேலை நாட்கள் என்றும் மூன்று நாட்கள் விடுமுறை நாட்கள் என்றும் விரைவில் அறிவிக்க உள்ளதாக பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் நான்கு நாட்கள் வேலைத்திட்டத்தை ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து பெல்ஜியம் நாட்டிலும் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்திற்கு அமைச்சரவை குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த திட்டம் பெல்ஜியம் நாட்டில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குடும்பத்திற்கும், வேலைக்கும் சமமான நேரத்தை ஒதுக்க மக்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக வாரத்தில் நான்கு நாட்கள் வேலை மற்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்ற திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக பெல்ஜியம் நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Belgium govt only 4 days working


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->