பெண்களை பலாத்காரம் செய்து சிறைத்துறை ஊழியர்கள் அட்டூழியம்! - Seithipunal
Seithipunal


உளவுத்துறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டோக் மாவட்டத்தில் சிறைச்சாலை ஒன்றில் கைதிகளை பார்ப்பதற்காக வரும் அவர்களின் உறவினர்கள் மற்றும் பெண்களை சிறைத்துறை ஊழியர்கள் பலாத்காரம் செய்துள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அட்டோக் சிறைச்சாலையில் போதைப்பொருள் பயன்பாடு பரவலாக காணப்படுகிறது. அந்த சிறை சாலையில் மாபியா கும்பல்கள் அதிகம் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக சிறையில் உலா வருகின்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான அறிக்கையை உளவு மையத்தின் அதிகாரி சிறைத்துறை ஐஜி மிஷ்ரா ஷாகிம் சலீம் பெய்க்கிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக டான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளவர்களை பார்க்க வரும் பெண்களை சிலர் சிறை ஊழியர்களே பாலியல் துன்புறுத்தலுக்கு மற்றும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என சிறைத்துறை பணியாளர் ஒருவர் குற்றச்சாட்டு கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் நிர்வாக கையாலாகாத செயல்பாட்டால் இந்த சம்பவம் அமைந்துள்ளது. வருங்காலத்தில் அவதூருக்கும் அழிவிற்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் செயலாளர் மட்டத்திலான உயர் அதிகாரி தலைமையில் கமிட்டி ஒன்று நிறுவப்பட்டு இந்த பிரச்சனை பற்றி விசாரணை நடத்தும் படி உளவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளை சந்திக்கும் ஒரு சிறுமி கைதிகளுக்கு போதை பொருட்களை வினோகித்து வருகிறார் என்றும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. சிறைக்கு வெளியே 500 ரூபாய்க்கு விற்கப்படும் சாராய பாக்கெட்டுகள் சிறைக்கு உள்ளே 3500 வரை விற்பனை செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Atrocity of prison staff by raping women in Pakistan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->