இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் முட்டுக்கட்டை போட திட்டத்துடன் டிரம்ப்..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டை பொறுத்த வரையில் அமெரிக்கா - அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கையின் கீழ் இருக்க வேண்டும் என்றும்., இந்த கொள்கையின் மீது அமெரிக்க அதிபரான டிரம்ப் உறுதியாக இருக்கிறார். மேலும்., அமெரிக்காவின் தயாரிப்பு பொருட்கள் மீது இந்திய அரசு கடுமையான வரி விதித்து வரும் நிலையில்., வரி விதிப்பு மன்னாக திகழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்தியா, இந்தியா சீனா வரைபடம், india, china, india china map,

இந்த சமயத்தில்., அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் சீனாவை பொருளாதார ரீதியில் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மற்றும் சீன நாடுகள் ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் சீனாவை இனி வளரும் நாடுகள் என்று கூற இயலாது. 

america, american president, american president trump, trump, trump images,

இதனடிப்படையில் இந்தியா மற்றும் சீன நாடுகள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து தேவையான நன்மைகளை பெற இயலாது. இந்த இரு நாடுகளும் தற்போது வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில்., உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து சில நன்மைகளை பெற்று வருகின்றனர். இந்த செயல் அமெரிக்காவிற்கு பாதகமாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாது வருடா வருடமாக பல நன்மைகளை தொடர்ந்து அனுபவித்து வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

american president speech about India economics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->