3 மாதமாக விமான நிலையத்தில் தலைமறைவு வாழ்க்கை... அதிர்ச்சியை தந்த இளைஞர்.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று பயத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ விமான நிலையத்தில், மூன்று மாதங்கள் மறைந்து வாழ்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபர் ஆதித்யா சிங் (வயது 36). இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். நீண்ட நாட்களாக வேலை இல்லாமல், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஆரஞ்சில் என்ற பகுதியில் நண்பர்களுடன் அறையெடுத்து தங்கியிருந்துள்ளார்.

அங்கிருந்து மற்றொரு நகருக்கு செல்ல சிகாகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்து விடுவோமோ? என்ற பயத்தில் அங்கேயே தங்கியுள்ளார். விமான நிலையத்தில் தங்கி, செயல்பாட்டு மேலாளரின் அடையாள அட்டையை திருடி உபயோகம் செய்து வந்துள்ளார். 

மேலும், விமான நிலைய ஊழியர்கள் விசாரித்தால் அடையாள அட்டையை காண்பித்து தப்பி சென்ற நிலையில், விமான நிலைய ஊழியர்களின் கேண்டினில் சாப்பிட்டு மறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பணியாளர்கள், அவரை அழைத்து விசாரித்தனர். இதன்போது, அடையாள அட்டையை பரிசோதனை செய்ததில், அது கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக மாயமான அடையாள அட்டை என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விமான நிலையத்தில் தடை செய்துள்ள பகுதியில் வசித்துவந்த குற்றம்சாட்டி கைது செய்துள்ளனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Chicago Airport Youngers Live 3 Month Banned Area of Airport


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->