கார் - ட்ரக் நேருக்கு நேர் மோதி விபத்து... 25 பேரில், 13 பேர் சம்பவ இடத்திலேயே பலி.! - Seithipunal
Seithipunal


ஒரு காரில் 25 பேர் பயணம் செய்த நிலையில், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி 13 பேர் மரணமடைந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா - மெக்சிகோ எல்லைப்பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த காரில் ஓட்டுநர் உட்பட 25 பேர் பயணம் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிய கார் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், கலிபோர்னியா - மெக்சிகோ எல்லைப்பகுதிக்கு அருகே செல்கையில், எதிரே வந்த ட்ரக் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியுள்ளது. நொடிப்பொழுதில் நடைபெற்ற கோர விபத்தில், 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்ட நிலையில், கார் விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களை தவிர பிறர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America California Car Truck Collision 13 Passenger Death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->