அருகருகே பறந்த அமெரிக்கா, ரஷியா போர் விமானங்கள் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


அருகருகே பறந்த அமெரிக்கா, ரஷியா போர் விமானங்கள் - காரணம் என்ன?

சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இந்த போரில் சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேசமயம், போரின் தொடக்கத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. 

இருப்பினும் அமெரிக்கா சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக அமெரிக்கா அவ்வப்போது , சிரியாவின் வான்பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில், நேற்று சிரியாவின் வான்பரப்பில் அமெரிக்க போர் விமானமும், ரஷிய போர் விமானமும் அருகருகே பறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது சிரியாவில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எம்.சி-12 ரக போர் விமானம் பறந்துகொண்டிருந்தது.

அப்போது திடீரென ரஷியாவின் சு-35 ரக போர் விமானம் அமெரிக்கா விமானத்தின் அருகே மோதும் வகையில் வந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால்,அடுத்த சில நிமிடத்திலேயே இரு போர் விமானங்களும் விலகி சென்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america and russia war flight fly close in syria


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->