காதல் ஜோடிக்குள் சண்டை.. காதலியை உயிருடன் கிரில் அடுப்பில் வைத்து சமைத்த பயங்கரம்...!! - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினா நாட்டில் வசித்து வரும் இளைஞரின் பெயர் நைம் வேரா (வயது 25). இவரது காதலியின் பெயர் ப்ரெண்டா மைக்கேலா கோர்டிலோ (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இவர்களின் காதல் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில், இருவருக்குள்ளும் திடீரென சண்டை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் காதலன், தனது காதலியை படிக்கட்டில் இருந்து தள்ளி விட்டுள்ளான்..

இதனால் காதலி படிக்கட்டில் இருந்து கீழே உருண்டு விழுந்த நிலையில், இவர் உயிருடன் உள்ளாரா? இறந்துவிட்டாரா? என்ற பயத்தில் மைக்கேலா இறந்துவிட்டதாக நைம் நினைத்துள்ளார். இதனையடுத்து கொலை வழக்கில் சிக்கிக்கொள்வோம் என்று பயந்துள்ளார். 

இதனை மறைப்பதற்கு காதலி இறந்துவிட்டாரா? என்பது கூட தெரியாமல் அவரை போர்வையில் சுற்றி, கேக் வேகவைக்கும் பெரிய அளவிலான கிரில் அடுப்பில் வைத்து எரித்துள்ளார். பின்னர் இவரது உடலை துண்டு துண்டாக நறுக்கி பிளாஸ்டிக் கவரில் போட்டு, பல்வேறு இடங்களுக்கு சென்று வீசியுள்ளார். 

பிளாஸ்டிக் கவரில் உள்ள உடல் பாகங்கள் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மேற்கூறிய பகீர் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில், மைக்கேலா உயிருடன் மயக்க நிலையில் இருக்கும் போதே எரிக்கப்பட்ட சோகமும், மூச்சுத்திணறி உயிரிழந்த கொடூரமும் அரங்கேறியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a man killed her love girl due to fight burn in cooking Owen


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->