அலுவகத்தில் ஆண் ஊழியரை கட்டாய பாலியல் உறவில் ஈடுபட வைத்த பெண் அதிகாரி: ரூ.844 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு..!
A lawsuit has been filed against a female officer who allegedly forced a male employee to have sex with her in the office seeking damages of Rs 844 crore
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவ மையத்தில், கியான் கூப்பர் என்பவர் கிளினிக்கல் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவருக்கு, அதே மையத்தில் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய மைக்கேல் புல் என்ற பெண் அதிகாரி உயர் அதிகாரியாக இருந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மைக்கேல் புல் தன்னைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக தற்போது கியான் கூப்பர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் தனது பெண் அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அவர், தனது வேலையைப் பறித்துவிடுவேன் என்று மிரட்டி, அந்தப் பெண் அதிகாரி தன்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன், வாரம் இரண்டு அல்லது மூன்று முறை அலுவலக நேரத்திற்கு முன்பாகவே தன்னை வரவழைத்து, அறைக்குள் வைத்துத் தவறாக நடந்துகொண்டதாகவும், இவ்வாறான செயலை நிறுத்தும்படி 100 முறைக்கு மேல் கேட்டும் அவர் செவிசாய்க்கவில்லை எனவும் கூப்பர் அவருடைய மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது செயலை நியாயப்படுத்தி அந்தப் பெண் அதிகாரி குறிப்பிடுகையில், ‘முன்னாள் அதிபர் ஒபாமா தனது மனைவி மிஷெலை அலுவலகத்தில்தான் சந்தித்தார். அப்போது மிஷெல் அவருக்கு அதிகாரியாக இருந்தார். எனவே நீங்களும் அதிபர் போல நடந்துகொள்ளுங்கள்’ என்று கூறியதாகக் கூப்பர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் சுமார் 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.844 கோடி) நஷ்டஈடு கேட்டு அந்த பெண் அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், இது பரஸ்பர சம்மதத்துடன் நடந்த உறவு என்று கூறி அந்தப் பெண் அதிகாரி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
A lawsuit has been filed against a female officer who allegedly forced a male employee to have sex with her in the office seeking damages of Rs 844 crore