நீங்கள் முரட்டு சிங்கிளா?.! உங்களுக்காக வருகிறது "Love-Pursuit, Y999" அதிவிரைவு இரயில்..!!  - Seithipunal
Seithipunal


இவ்வுலகில் பல விதமான பிரச்சனையை அனுபவித்தும் வரும் மக்கள் குடும்பத்தார் - காதலர் - காதலர் அல்லாதோர் என்று பல விதமான நிலையில் இருந்து வருகின்றனர். இதில் முரட்டு சிங்கள் மற்றும் சிங்கள் என்று இருக்கும் நபர்கள் தனக்கான துணையை தேட இயலாமலும்., தேடினாலும் - பார்த்தாலும் தங்களின் காதலை வெளிப்படுத்த தெரியாமலும் இருக்கின்றனர். 

இதிலும் சிலர் தான் தனது தோழியுடனோ அல்லது தோழனுடனோ வெளிப்படையாக பழகியிருந்தாலும்., தங்களின் காதலை தெரிவித்தால் ஏதேனும் நினைப்பாரோ? தன்னை தவறாக புரிந்து கொள்வாரோ? என்று எண்ணி எவ்வுளவு காதல் இருந்தாலும்., அவருக்கு உதவியாக கடைசி வரை இருந்து தங்களின் காதலை கூறாமலே கண்ணீருடன்., அவரது திருமணத்திற்கு பின்னர் திரும்பிய தருணமும் இருக்கும். 

love pursuit, love pursuit train china, Qianjiang,

இந்த பிரச்சனையை கருத்தில் கொண்ட சீன அரசு., காதலிக்க ஆட்கள் இல்லாமல் இருக்கும் ஒற்றையறை இரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்து., இதன் மூலமாக அவர்களுக்கான துணையை தேர்ந்தெடுக்க அனுமதி செய்து தருகிறது. அங்குள்ள மக்களை ரயில் பயணத்தின் மூலமாக Y999 என்ற இரயிலின் மூலமும்., மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் அனைவரும் இரயில் பயணத்தில் இருந்து நிகழ்ச்சி வரை தங்களுக்கான துணையை தேர்ந்தெடுக்கலாம். 

love pursuit, love pursuit train china, Qianjiang,

இந்த செயல்முறையானது கடந்த 2015 ஆம் வருடத்தின் முதல் அறிமுகம் செய்யப்பட்டு இருந்த நிலையில்., கடந்த மூன்று வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தில்., பயணம் செய்த 3000 சிங்கில்களில் சுமார் 10 க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து மகிழ்வாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். பின்ன என்ன மக்களே... உடனே புக்கிங் பண்ணிடுங்க... இந்த செய்திக்கான சீன நாளிதழ் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.. 

China is sending young single people on an overnight 'Love Train' in a bid to tackle its sex problem 

The pursuit of true love is the hopeful aim on China's matchmaking train

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a china love pursuit train


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->