அமெரிக்காவில் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு - 9 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் சீன புத்தாண்டு தினத்தை கொண்டாடிய நபர்கள் மீது 72-வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடக்கு கலிபோர்னியா மற்றும் அயோவாவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

இதில் வடக்கு கலிபோர்னியாவின் ஹாஃப் மூன் பே, சான் பிரான்சிஸ்கோவின் தெற்கே உள்ள பண்ணைகளில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 people were killed in shootings in 3 places in America


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal