5 மாத பயணம்.! விண்வெளியிலிருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய 4 வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் மாதம் நாசா விண்வெளி வீரர்களான நிக்கோல் மான் மற்றும் ஜோஷ் கசாடா, ஜாக்ஸா (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்) விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா மற்றும் ரஷிய(ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி) வீராங்கனை அன்னா கிகினா ஆகியோர் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'குருவ்-5' விண்கலத்தில் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.

இதையடுத்து கடந்த 5 மாதங்களாக விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்த அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த 4 வீரர்கள் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 'குருவ்-5' விண்கலத்தில் பூமிக்கு திரும்பினர். இதைத்தொடர்ந்து சுமார் 20 மணி நேர பயணத்துக்கு பின் விண்வெளி வீரர்கள் பாராசூட் உதவியுடன் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா கடற்கரையில் இரவு 9:02 மணியளவில் பாதுகாப்பாக வந்தடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 soldiers returned to Earth safely from space after 5 months


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->