வங்கதேசத்தில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து - 3000 வீடுகள் எரிந்து நாசம் - Seithipunal
Seithipunal


மியான்மரின் ராணுவத்திற்கு அஞ்சி ஆயிரக்கணக்கான மியான்மர் மக்கள் வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் முகாமில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தீயானது நன்கு கொழுந்து விட்டு எரிந்து அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாக பரவியது.

இந்த பயங்கர தீ விபத்தில் தேவாலயங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தீயினால் ரோஹிங்கியா பகுதியில் இதுவரை 12000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறிய படாத நிலையில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3000 homes destroyed as fire in refugee camp Bangladesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->