நைஜீரியா :: இரு வெவ்வேறு லாரி-பேருந்து விபத்துகளில் 20 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


நைஜீரியாவில் நடந்த இரு வெவ்வேறு லாரி-பேருந்து விபத்துகளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் லாகோஸ் நகரில் கன்டெய்னர் ஏற்றி சென்ற லாரி பாலத்தில் சென்றபொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாக சென்ற பயணிகள் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் மீது கண்டெய்னர் விழுந்ததால், பேருந்தில் பயணித்த 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி உயிரிழந்தனர்.

மேலும் அதிர்ஷ்டவசமாக ஒரு பெண் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து நெரிசலினால் டிரக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நைஜீரியாவின் ஓடிக்போ கவுன்சில் பகுதியில் லாகோஸ்-பெனின் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதைைடுத்து பேருந்து தீப்பிடித்து எறிந்ததால், 11 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இந்த 2 விபத்துக்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 died in two separate lorry bus accidents in Nigeria


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->