பிரேசிலில் நிலச்சரிவு.! 2 பேர் பலி, 30-க்கும் மேற்பட்டோர் மாயம்.! - Seithipunal
Seithipunal


பிரேசிலின் பாரானா மற்றும் சாண்டா கேடரன் உள்பட பல மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து கனமழை காரணமாக 17 நகரங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சாலைப் பயணத்தைத் தவிர்க்குமாறு சாண்டா கேடரினா அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தெற்கு பாரானா மாகாணம் போலாரது என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில், நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அந்த வழியாக பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 dead more than 30 missing in landslide at Brazil


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->