சிரியாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் வான்தாக்குதல்.! 15 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


சிரியாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியா மற்றும் இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் இஸ்ரேல் அவ்வப்போது சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நேற்று வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாதுகாப்பு நிறைந்த ராணுவ முகாம் உள்ள கபர் சூசா நகர் மீது தொடர்ச்சியாக இஸ்ரேல், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருந்த ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் சேதமாகின. மேலும் இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை சிரியாவின் ஹோம்சில் மாகாணத்தின் அல்-சோக்னா நகர் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 53 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பேரழிவில் இருந்து மீள்வதற்குள் சிரியாவில் அடுத்தடுத்து சோகங்கள் நிகழ்ந்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 killed in airstrikes by Israeli soldiers in Syria


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->