வங்காளதேசம்: 14 இந்து கோவில்கள் மீது தாக்குதல்.! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு - Seithipunal
Seithipunal


சமீப காலமாக வெளிநாடுகளில் இந்து கோயில்களின் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேரி வருகிறது. இதில் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில்களின் மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு, கோவில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன.

இந்நிலையில் வங்காள தேசத்தில் நேற்று முன்தினம் 14 இந்து கோவில்களின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சிந்தூர்பிந்தி பகுதியில் உள்ள கோவிலில் 9 சாமி சிலைகள், காலேஜ்பாரா பகுதியில் உள்ள கோவிலில் 4 சாமி சிலைகளை சூறையாடியுள்ளனர் என்றும், ஷாபாஜ்பூர் நாத்பாரா பகுதியின் 12 கோவில்களில் 14 சுவாமி சிலைகள் சூறையாடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரவு நேரங்களில் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை அதிகாரி கைருல் அனாம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுவாமி சிலைகளின் தலை, கை, கால்கள் உடைக்கப்பட்டு குளத்திலும், சாலையோரங்களிலும் வீசப்பட்டுள்ளதாக கோவில் அமைப்பின் பொதுச் செயலாளர் வித்யாநாத் பர்மன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தி, சாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 Hindu temples attacked by miscreants in bangladesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->