111 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ்.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. பல நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். சில நாடுகளில் கொரோனாவின் 3-வது அலை ஏற்பட்டுள்ளது. 

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனாவின் உருமாறிய வகையால் பாதிக்கப்பட்டு வருகிறது. அவை ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே,172 நாடுகளில் ஆல்பா கொரோனா வைரஸ் பரவியுள்ளது, 120 நாடுகளில் பீட்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது, 72 நாடுகளில் காமா வகை கொரோனா வைரஸ் பரவி மக்களை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் 111 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நாடுகளில் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

111 countries delta virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->