வானிலை எச்சரிக்கை...! - கீழடுக்கு சுழற்சியால் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...?
Which districts likely receive rain due low pressure circulation
தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், மார்ச் 26 முதல் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 37.5 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் குறைந்தபட்சமாக 9.1 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, மார்ச் 25 வரை பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஆனால், மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
English Summary
Which districts likely receive rain due low pressure circulation