தென்மேற்கு பருவமழை தொடங்கியது.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இன்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதியில் தான் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில், தொடர்ந்து நான்கு மாதங்கள் நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு மாதங்களில் மழைப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இன்று தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வட இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே பரவலாக பரவலான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு வழக்கமான அளவு தென்மேற்கு பருவமழை இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today southwest monsoon started in kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->