தமிழகத்தில் இன்று, மழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்.!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெயில் இரண்டு மாதங்களாக சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

கோடை மழையை பல இடங்களில் பெய்யாமல் மக்கள் தண்ணீரை தேடி சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 13 weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->