சென்னையில் 35.5°C வெப்பம் பதிவு...! - வங்கக்கடல் புயலின் பின்விளைவாக வானிலை மாற்றம்...!
Chennai records 35point5 C temperature weather change result Bay Bengal cyclone
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சில நாட்களாக இடைவேளைக்கு பின் வானிலை திடீரென மாறி வெப்பம் அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் கரையை கடந்து சென்றபோது, அது கிழக்குத் திசை காற்றை முழுவதும் இழுத்துச் சென்றது. இதன் விளைவாக, கிழக்குக் காற்று இல்லாததால் மேற்கு காற்று ஊடுருவி, தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் எதிர்பாராத அளவில் உயர்ந்துள்ளது.

இந்த வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவில் புதிய சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் மாதத்திற்கான வரலாற்று சாதனை வெப்பம் பதிவாகியுள்ளது.வெப்பநிலை 95.9 டிகிரி ஃபாரன்ஹீட் (35.5°C) என உயர்ந்தது. இது கடந்த பல ஆண்டுகளில் நவம்பரில் இதுவரை காணாத சூடான நாளாகும்.
வெப்ப அலையால் பாதிக்கப்படுவது சென்னை மட்டுமல்ல, முழு தமிழ்நாட்டிலும் அடுத்த ஒரு வாரம் வரை வெப்பத்தின் தாக்கம் தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிழக்குக் காற்று இல்லாமை, சுமத்ரா கடல் பகுதியில் வெப்பநிலை உயர்வு போன்ற காரணங்களே இந்த வெப்பநிலையின் முக்கிய காரணங்களாகும்.
ஆனால் இதே சமயம், ஆய்வாளர்கள் நம்பிக்கையூட்டும் தகவலையும் தெரிவித்துள்ளனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலுடன் இரவில் இடி மின்னல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த மாறும் வானிலை நிலை நவம்பர் 3 (திங்கட்கிழமை) முதல் நவம்பர் 8 (சனிக்கிழமை) வரை நீடிக்கும் என வானிலை துறை தெரிவித்துள்ளது.
English Summary
Chennai records 35point5 C temperature weather change result Bay Bengal cyclone