பல்வேறு மாவட்டங்களில் கனமழை.! மழையால் 7 பேருக்கு ஏற்பட்ட சோகம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.  காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையிலிருந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. பின் இரவு நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இதேபோல திருப்போரூர், கிழக்கு கடற்கரை சாலை , கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மகனமழை கொட்டி தீர்த்தது. மேலும், சேலம், திருவள்ளுர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. 

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக, இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் அருகே உள்ள கீழ முட்டுக்காடு கிராமத்தில் லட்சுமி அம்மாள், கலைச்செல்வி, சாந்தி, விஜயா ஆகியோர் விவசாய பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது மின்னல் தாக்கியதில் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 members died for thunder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->