123 ஆண்டுகளில் மீண்டும்.. கைவிரிக்கும் வடகிழக்கு பருவமழை!! அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.!! - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனர் அலுவலகத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்காலில் சராசரியாக 96 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

இதே காலத்தில் இயல்பான அளவு 171 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்க வேண்டும். தமிழகத்தில் இயல்பை விட 48% வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த 123 ஆண்டுகளில் 9வது முறையாக அக்டோபர் மாதத்தில் மழை குறைவாக பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 4 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட மிகக் குறைவாகவும் வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது.

தமிழக கடற்கரைப் பகுதிகளை ஒட்டிய வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்க சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை போட்டியுள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

48 percent less northeast monsoon rains in Tamilnadu in October


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->