#Viral_Video || திமுக-பாஜக இடையே மோதல்.. போர்க்களமாக மாறிய அரங்கம்.. நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் நேற்று தனியார் செய்தி ஊடகம் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருந்த நிலையில் பாஜகவை சேர்ந்த எஸ்.ஜி சூர்யா பேசும்போது திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினரும் வாக்குவாதம் செய்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விவாத அரங்கம் போர்க்களமாக மாறியது. இரு தரப்பினரும் தங்கள் மீது ஒருவரை ஒருவர் நாற்காலிகளை எரிந்து தாக்கி கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த விவாத நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் கலந்து கொண்ட கல்யாணசுந்தரம் தனது எஸ் சமூக வலைதள பக்கத்தில் "நியூஸ் 18 தொலைக்காட்சியில் நேற்று நடந்த விவாத அரங்கில், ஜனநாயக மாண்பை காத்த திமுக மற்றும் பிஜேபி கட்சிக்காரர்கள்!!

இதற்காகத்தான் இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று சொல்கிறோம்... திமுக M.L.A எழிலரசன் விவாத அரங்கில் பேசிமுடித்து அமர்ந்த பின்பு, பிஜேபி யை சார்ந்த சூர்யா பேசினார். திடீரென்று எழுந்த திமுக எழிலரசன், அவர் பொய் பேசுகிறார் எனவே நான் மறுபடியும் பேசுவேன் என்று சொல்லி தானாக போய் மீண்டும் மைக் பிடித்தார். 

விவாத அரங்கு ஒன்றில் இது போன்ற ஒழுங்கீன நடவடிக்கையை இதற்கு முன் யாரும் பார்த்ததில்லை. இதை கண்டித்து தடுக்க வேண்டிய, நெறியாளரும் இதை அனுமதித்து வேடிக்கை பார்த்ததும், ஒரு பொது நிகழ்வில் ஜனநாயக மரபுகளை கடந்து திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் தங்களின் பொதுக்கூட்ட மேடை போல மேடையை பயன்படுத்தியதும் அருவருக்கத்தக்க நிகழ்வுகள்...

தமிழ்நாடு முழுவதும் இந்த 3 ஆண்டுகளாக எப்படி வேடிக்கை மட்டும் பார்க்கிறதோ, அதேபோல் இந்த அரங்கிலும் இவ்வளவு கலவரத்திலும் கை கட்டி வேடிக்கை பார்த்து திமுக விசுவாசத்தை காட்டியது கண்ணியமிக்க காவல்துறை... கடுமையான கண்டனங்களை தெரிவித்துவிட்டு வந்தேன். ஆனால், அதை ஒளிபரப்ப மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்!! வாழ்க ஊடக அறம் வாழ்க ஜனநாயகம்!!" என பதிவிட்டு வீடியோ ஒன்றையும் பகிர்ந்து உள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK BJP cadres attack on each other video viral


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->