உலகக்கோப்பை தோல்வி : கேப்டன் கோலி, கோச் ரவி சாஸ்திரி நீக்கமா? BCCI அதிரடி! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவானது, இந்தியாவின் உலகக் கோப்பை செயல்பாடு குறித்து, கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறஉள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான செயல்திட்டம் குறித்தும் ஆராய உள்ளது. 

"பயிற்சியாளரும், கேப்டனும் இந்தியா வந்த பின்னர் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு, நிச்சயமாக மறு ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்துவோம். இதறகாக தனிப்பட்ட தேதி நேரம் அறிவிக்க மாட்டோம் என்றும், "இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் இப்போது முடிந்துவிட்டது. அடுத்து என்ன திட்டம் என்பதனை இப்போது கூற இயலாது என்றும், ரவி சாஸ்திரி, கோஹ்லி மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் சில கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் நிர்வாகி வினோத் ராய் தெரிவித்துள்ளார். 

அதில் முதல் கேள்வியாக உலககோப்பைக்கு முன்பான லாஸ்ட் மேட்ச் வரை அம்பதி ராயுடு டீமில் எதற்காக நீடித்தார், குழு நிர்வாகமோ அல்லது தேர்வாளர்களோ நான்காவது இடத்திற்கு அவர் சரியானவர் தான் என்பதனை ஏன் நம்பவில்லை? 

அடுத்து அணியில் மூன்று விக்கெட் கீப்பர்கள் ஒரே நேரத்தில் எதற்காக இருந்தனர். குறிப்பாக தினேஷ் கார்த்திக், ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக சிறப்பாக விளையாடாத நிலையிலும், மோசமான ஐ.பி.எல். செயல்பாட்டுக்கு பிறகும் கூட ஏன் ஆட்டத்தில் இறக்கினீர்கள்?

மூன்றாவதாக, நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் மகேந்திர சிங் தோனி ஏன் ஏழாவது இடத்தில் அனுப்பப்பட்டார்? பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தான், தோனியின் இடத்தைப் பற்றி முடிவு செய்தார் எனில் தலைமை பயிற்சியாளரை கேட்காமல் அவர் எப்படி முடிவு எடுத்தார்? என கேள்விகளை அடுக்கியுள்ளார்.  

தற்போதைய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு பி.சி.சி.ஐ யின் ஆண்டு கூட்டம் வரை தொடரும், அதே வேளையில், தேர்வுக் கூட்டங்களில் அதிக உறுதியுடன் இருக்குமாறு தேர்வாளர்களின் தலைவருக்கு அறிவுறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bcci new announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->