வாட்ஸ் அப் ஐ.ஒ.எஸ். செயலியில் விரைவில் 'dark mode'..! - Seithipunal
Seithipunal


ன்று வாட்ஸ்அப் இல்லாமல் யாரும் இல்லை என்ற நிலையில் உலகம் உள்ளது. அப்படிப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புது புது அப்டேட்களை வழங்கிவருகிறது.

அதன் அடுத்த அப்டேட்டாக, வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா செயலியில் டார்க் மோட் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

ஐ.ஒ.எஸ். 2.20.10.23 அப்டேட்டில் வாடிக்கையாளர்களுக்கு டார்க் மோட், லோ டேட்டா மோட் மற்றும் காண்டாக்ட்ஸ் இன்டகிரேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். அதுபற்றி சில விவரங்கள் இங்கு....

லோ டேட்டா மோட் :

ஐபோன் மொபைல் டேட்டாவில் இருக்கும் போது லோ டேட்டா மோட் மீடியா ஃபைல், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்டவை ஆட்டோ டவுன்லோடு ஆவதை தடுத்து நிறுத்தும். 

வைபை இல்லாத சமயங்களில் மொபைல் டேட்டா பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற அம்சம் ஐபோன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் வழங்கவுள்ளது. இதனை இயக்க செட்டிங்ஸ் -, செல்லுலார் -, செல்லுலார் டேட்டா ஆப்ஷன் -, லோ டேட்டா மோட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

காண்டாக்ட்ஸ் இன்டகிரேஷன் :

இந்த அம்சம் ஐபோனில் இருந்து டாக்குமெண்ட் அல்லது ஏதேனும் மீடியா ஃபைல்களை பகிரும் போது, வாட்ஸ்அப் காண்டாக்ட், க்ரூப்கள், ஏர் டிராப் மற்றும் மெயில் ஆப்ஷன்கள் போன்றவை பரிந்துரைக்கப்படும்.

புதிய ஐ.ஒ.எஸ். ஷேர் ஷீட் மூலம் மல்டிமீடியா தரவுகளை நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app next update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->