எடிட் செய்ய இனி 1 மணி நேரம் அவகாசம்.. ட்விட்டர் கொடுத்த அப்டேட்..!! - Seithipunal
Seithipunal


ட்விட்டர் நிறுவனம் எலான் மாஸ்க் வசமானது முதல் பல்வேறு மாற்றங்களை அவர் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு வந்துள்ளார். வணிக நோக்கில் ப்ளூட் டிக் பெற பயனாளர்கள் கணக்குகளிடமிருந்து சந்தா வசூலிக்க தீர்மானித்தார். அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி ப்ளூ டிக் என்ற அங்கீகரிக்கப்பட்ட கணக்கு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பயனாளர்கள் விளம்பரம் இல்லாமல் ட்விட்டர் தளத்தை பயன்படுத்த முடியும். 10,000 கேரக்டர்கள் ட்விட் செய்ய முடியும், ட்விட்டரில் அறிமுகமாகவும் புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்த முடியும். இதற்காக மொபைல் போன் பயனாளர்களுக்கு 900 ரூபாயும் வலைதள பயனாளர்களுக்கு 650 ரூபாயும் மாதம் சந்தாவாக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இனி ட்விட்டர் பயனாளர்கள் தாங்கள் பதிவிட்ட ட்விட்களை எடிட் செய்வதற்கு ஒரு மணி நேரம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் ஒரு மணி நேரத்திற்குள் 5 முறை ட்விட்டுகளை எடிட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது ட்விட்டர் ப்ளூ டிக் பயனாளர்கள் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twitter give 1 hour to edit a tweet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->