அசத்தலான மூன்று புதிய நோக்கியா லேப்டாப் மாடல்கள் அறிமுகம்! - Seithipunal
Seithipunal


ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பியுர்புக் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. பியுர்புக் போல்டு, நோக்கியா பியுர்புக் லைட் மற்றும் நோக்கியா பியுர்புக் ப்ரோ என மூன்று லேப்டாப்கள் அறிமுகமாகியுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• நோக்கியா பியுர்புக் போல்டு மற்றும் பியுர்புக் லைட் மாடல்களில் 14 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

• பியுர்புக் ப்ரோ மாடலில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

• போல்டு மற்றும் லைட் மாடல்களில் இண்டெல் பெண்டியம் சில்வர் N6000 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.  

• பியுர்புக் ப்ரோ மாடலில் இண்டெல் கோர் i3 1220P பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த 3 லேப்டாப் மாடல்களிலும் FHD IPS ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

• பியுர்புக் போல்டு மாடலில் டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

• நோக்கியா பியுர்புக் சீரிஸ் மாடல்களில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, வைபை 5 வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் யுஎஸ்பி 3.2 (x2), யுஎஸ்பி ஏ 3.2 (x1) போர்ட்கள், 3.2 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

• இந்த மாடல்களில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கைரேகை சென்சார், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

• இதன் போல்டு மற்றும் லைட் மாடல்களில் 128 ஜிபி எஸ்எஸ்டி, பியுர்புக் ப்ரோ மாடலில் 512 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டுள்ளது.

• பியுர்புக் லைட் எடை 1.47 கிலோவும், பியுர்புக் போல்டு 2.5 கிலோவும், பியுர்புக் ப்ரோ எடை 2.0 கிலோ ஆகும்.

• இதன் ப்ரோ மாடலில் 2MP கேமரா மற்றும் அலுமினியம் டாப் பிரேம் வழங்கப்பட்டுள்ளது.

• சிறிய மாடல்களில் 1MP கேமரா மற்றும் பிளாஸ்டிக் பிரேம் வழங்கப்பட்டுள்ளது.

• 15.6 இன்ச் மாடலில் பேக்லிட் கீபோர்டு, 57Wh பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

• லைட் மற்றும் போல்டு மாடல்களில் 38Wh பேட்டரி மற்றும் 44 வாட் பவர் அடாப்டர் வழங்கப்பட்டுள்ளது.

• 14 இன்ச் மாடல்களை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

• நோக்கியா பியுர்புக் சீரிஸ் விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டுள்ளது. இதன் ப்ரோ மாடலில் நான்கு ஸ்பீக்கர் சிஸ்டம், சிறிய மாடல்களில் 2 ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three new Nokia laptop models introduced


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->