அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவிற்கு வருகிறது ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன்.! - Seithipunal
Seithipunal


ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிசை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் நார்டு பட்ஸ் CE ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 299 ஆகும். 

இதனை தொடர்ந்து, ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு பிராண்டிங்கில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிறைந்த புது சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் நார்டு 3 ஸ்மார்ட்போன், நார்டு வாட்ச், நார்டு பேண்ட் மற்றும் புதிய நார்டு பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் மாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா  தெரிவித்துள்ளார். ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போன் மாடலை தொடர்ந்து அந்நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. 

ஒன்பிளஸ் நார்டு 3 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்:

• இந்த மாடலில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

• மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர் மற்றும் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OnePlus Nord 3 smartphone


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->