புதிய ரெட்மி 11 பிரைம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம்! - Seithipunal
Seithipunal


சியோமி நிறுவனம் அதன் புதிய ரெட்மி 11 பிரைம் மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி A1 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

விலை விவரங்கள்:

ரெட்மி 11 பிரைம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 12 ஆயிரத்து 999.

ரெட்மி 11 பிரைம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 14 ஆயிரத்து 999.

ரெட்மி 11 பிரைம் 5ஜி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 13 ஆயிரத்து 999.

ரெட்மி 11 பிரைம் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 15 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இரு மாடல்களிலும் 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் LCD ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

• 90Hz ரிப்ரெஷ் ரேட், டியு-டிராப் நாட்ச் மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

• இதன் 4ஜி மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

• ரெட்மி 11 பிரைம் மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் மற்றும் ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டுள்ளது.
 
• ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7000 பிராசஸர் மற்றும் ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டுள்ளது.

• இரு மாடல்களிலும் LPDDR4x ரேம், UFS2.2 மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

• புதிய ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் தண்டர் பிளாக், க்ரோம் சில்வர் மற்றும் மீடோ கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

• மேலும், ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் பெப்பி பர்பில், பிலாஷி பிளாக் மற்றும் பிளேஃபுல் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் நிறங்களில் கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Redmi 11 Prime series smartphone models launched


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->