செம ஸ்மார்ட் அப்டேட்டுடன் வெளியாகும் இன்பீனிக்ஸ்.!  - Seithipunal
Seithipunal


நமது இந்திய சந்தையில் இன்பீனிக்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ் 5 லைட் என்ற தொடுதிரை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் அளவிலான எச்.டி ப்ளஸ் அளவு கொண்ட ஸ்க்ரீன்., மீடியாடெக் ஹீலியோ பி 22 திறன் கொண்ட பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. 

பன்ச் ஹோல் கொண்ட டிஸ்பிளே மற்றும் செல்ஃபீ எடுப்பதற்காக 16 எம்.பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 9 பை ரகத்தை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ் 5 இயங்கு தளத்தையும்., புகைப்படங்களை எடுப்பதற்கு 16 எம்.பி கேமராவும்., 2 எம்.பி அளவிலான டெப்த் சென்சார் மற்றும் லோவ் லைட் சென்சார் ஆகியவை உள்ளது. இதனோடு குவைத் பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது.

எஸ் 5 லைட் சிறப்பம்சம் : 

6.6 இன்ச் அளவிலான ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்.,
மீடியாடெக் ஹீலியோ பி 22 பிராசசர்.,
4 ஜி.பி ரேம்.,
64 ஜி.பி மெமரி.,
மெமரி நீட்டிக்கும் வசதி.,
16 எம்.பி கேமரா.,


2 எம்.பி டெப்த் சென்சார்.,
லோவ் லைட் சென்சார்.,
16 எம்.பி செல்ஃபி.,
ஆண்ட்ராய்டு 9 பை எக்ஸ்.ஒ.எஸ் 5.,
பேஸ் அன்லாக் பாதுகாப்பு., 
கைரேகை பாதுகாப்பு சென்சார்.,
4000 எம்.ஏ.எச் பேட்டரி திறன்.. 

இந்த அலைபேசியை வெளியிட்டுள்ள இன்பீனிக்ஸ் நிறுவனமானது இன்பீனிக்ஸ் எஸ் 5 லைட் ஸ்மார்ட் அலைபேசிக்கு ரூ.7,999 நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அலைபேசிக்கான விற்பனையானது நவம்பர் மாதத்தின் 22 ஆம் தேதி பிளிப்கார்ட் இணையத்தில் நடைபெறவுள்ளது.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

infinix s5 lite sales start on nov 20 flip kart


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->