வாட்சாப் ஸ்டேட்டஸை சேமிக்க எந்த 'ஆப்' பும் வேண்டாம்!! இது தான் ட்ரிக்ஸ்!!  - Seithipunal
Seithipunal


பலர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ சேமிக்க பிளே ஸ்டோரில் இருந்து சில மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி சேமிப்பர். ஆனால், அப்படி எந்த செயலியையும் பயன்படுத்தாமல் பதிவிறக்கம் செய்ய முடியும். 

வழிமுறைகள்: 

பின்வரும் வழிமுறைகளை கடைபிடித்தால் எளிமையாக வாட்சாப் ஸ்டேட்டஸ்களை சேமிக்கலாம். 

முதலில் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் உள்ள ஃபைல் மேனேஜர் 'ஆப்' ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 

பின்னர், ஃபைல் மேனேஜரின் உட்புற சேமிப்பகத்தைத்(INTERNAL MEMORY) தேர்வு செய்து, அதில் செட்டிங்ஸ்(SETTINGS) செல்க.

அந்த செட்டிங்ஸில் 'Show Hidden Files’ என்பதை எனேபிள்(ENABLE) செய்யவும்.

அதன் பின்னர் உட்புற சேமிப்பகத்தில்(INTERNAL MEMORY) உள்ள வாட்ஸ்அப் ஃபோல்டரை ஓபன் செய்யவும்.

வாட்ஸ்அப் ஃபோல்டரில் உள்ள மீடியா என்ற ஃபோல்டரை ஓபன் செய்யவும். 

அந்த மீடியா ஃபோல்டரில் ‘Statuses’ என்ற ஆப்ஷன் இருக்கும். அந்த போல்டரில் நீங்கள் இதுவரை பார்த்த அனைத்து ஸ்டேட்டஸ்களும் இருக்கும் அதனை செலக்ட் செய்து, மீண்டும் காப்பி(COPY) செய்து தேவையான இடத்தில் பேஸ்ட்(PASTE) செய்ய வேண்டும். 

English Summary

HOW TO SAVE WHATS APP STATUS WITHOUT ANY APPLICATIONS


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal