கூகுளின் அதிர்ச்சிகர அறிவிப்பு.! 44 லட்சம் யூட்யூப் சேனல்களின் கதி.! - Seithipunal
Seithipunal


ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தில் ஒன்றான யூடியூப் நிறுவனம் சமீபத்திய பதிவு ஒன்றில், சமூக விதிகளை மீறிய வீடியோக்களை பதிவேற்றிய காரணத்திற்காக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் பதினோரு லட்சம் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 90சதவீத வீடியோக்கள் யூடியூபில் மென்பொருள் நிறுவனத்தின் மூலம் ஆட்டோமேட்டிக்காக கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். 

மேலும் கடந்த ஜனவரி 2022 முதல் 94.3 கோடி தடை செய்ய வேண்டிய கமெண்ட்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொய் விளம்பரங்களை பயன்படுத்தும் ரக பதிவுகளை யூடியூப் அனுமதிக்காது என்பது கவனிக்கத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

google about YouTube channels ban


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->